×

நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊனமலை ஊராட்சி. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில், தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் ராஜராமன் தலைமை தாங்கினார். முன்னதாக அச்சிறுப்பாக்கம் ஒன்றிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் அனைவரையும் வரவேற்றார். செங்கல்பட்டு மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலாஜி சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற அலுவலக வளாகம்  உள்ளிட்ட சில இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், ஊராட்சி முழுவதும் கழிவுநீர் கால்வாய்கள், தெருக்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை சுகாதாரப்படுத்தும் பணியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

The post நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED மணல் குவாரி விவகாரம் அமலாக்கத்துறை...