தமன்னாவை மிஞ்சிய காஜல் அகர்வால்

தமிழில் உருவாகும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இதே படம் தெலுங்கில், ‘தட் ஈஸ் மகாலட்சுமி’ பெயரில் உருவாகிறது. இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. வழக்கமான ஒரு டீஸராகவே இதுவும் இருக்கும் என்று எண்ணிய நிலையில் காஜல் அகர்வால் அதிர்ச்சி தரும் காட்சியில் நடித்திருந்தது திரையுலகினரையும், ரசிகர்களையும் பரபரப்புக்குள்ளாக்கியது.

கண்ணிமைக்கும் சில நொடிகளில் வரும் காட்சி ஒன்றில் காஜல் அமைதியாக நின்றிருக்க அவரது அருகில் நிற்கும் தோழி திடீரென்று காஜலிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொள்வதுபோலவும் அதனால் காஜல் ஷாக் ஆகி நிற்பதுபோலவும் காட்சி இருந்தது. இதையடுத்து தமன்னா நடித்த தட் ஈஸ் மகாலட்சுமி படத்தின் டீஸரையும ரசிகர்கள் தேடத் தொடங்கியதுடன் காஜலைப்போல் தமன்னாவும் அதுபோல் ஆபாச காட்சியில் நடித்திருக்கிறாரா என்று கவனித்தனர்.

ஆனால் தமன்னாவின் அதுபோன்ற  காட்சி இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். காஜல் நடித்த டீஸர் இணைய தளத்தில் லைக்குகளை அள்ளிய நிலையில் தமன்னாவின் டீஸர் பின்தங்கியது. மேலும் காஜல் வழக்கமான தமிழில் வசனம் பேசி நடித்திருக்கிறார். ஆனால் தமன்னா தெலுங்கில் பேசி நடிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Tags : Kajal Agarwal ,Tamanna ,
× RELATED லீக் ஆன ‘இந்தியன் 2’ கமல் குதிரை சவாரி:...