×

கார்த்திகை தீப விழாவுக்கு தயாராகிறது திருவண்ணாமலை!: பூர்வாங்க பணிகள் தொடக்கம்.. விமர்சியாக நடைபெற்ற பந்தகால் முகூர்த்தம் விழா..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற நவம்பர் மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 6-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுகிறது. அக்னி தலமான திருவண்ணாமலை தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் சிவலிங்கமே மலையாக காட்சியளிப்பதாக ஐதீகம். இந்த மலையை இன்றைக்கும் ஏகப்பட்ட சித்தர்கள் அரூபமாக கிரிவலம் வருகின்றனர். இங்குள்ள மலையானது சுமார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக வரலாற்று ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 6ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.அதையொட்டி, பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள இன்று காலை ராஜகோபுரம் முன்பு வேதமந்திரங்கள் முழுங்க பந்தக்கால் முகூர்த்தம் விமர்சியாக நடைபெற்றது. திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டியில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகைதீப திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் மகா தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் தீபத்திருவிழாவில் பங்கேற்பார்கள்….

The post கார்த்திகை தீப விழாவுக்கு தயாராகிறது திருவண்ணாமலை!: பூர்வாங்க பணிகள் தொடக்கம்.. விமர்சியாக நடைபெற்ற பந்தகால் முகூர்த்தம் விழா..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvanamalai ,Karthika Deepa Festival ,Bandhakal Muhurat Festival ,Thiruvannamalai ,Arunasaleswarar Temple ,Thirukkarthi Diepat Festival ,Karthikai Depa Festival ,
× RELATED தி.மலை கார்த்திகை தீப விழாவுக்கு நெய்...