×

மீண்டும் இணையும் மகாராஜா காம்போ.!!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி – நித்திலன் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மகாராஜா. தமிழில் மட்டுமல்லாது சீனா வரை இப்படம் வசூலைக் குவித்து தயாரிப்பாளருக்கு பெரிய வணிகத்தைக் கொடுத்தது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உலகளவில் கவனம்பெற்றதுடன் ஆஸ்கர் விருதுபெற்ற திரைக்கதையாளர் அலெக்ஸாண்டர் டெனலாரிஸ், நித்திலனை நேரில் அழைத்துப் பாராட்டினார். அடுத்தாக, நித்திலன் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து புதிய படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது.

ஆனால், இப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நித்திலன் மீண்டும் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,Vijay Sethupathi ,Nithilan Saminathan ,Vijay Sedupathi ,Nithilan ,China ,
× RELATED சவால் விட்ட பிரபாஸ் பட இயக்குனர்