×

தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின் போது தீபிகா படுகோனுக்கு இதயத்துடிப்பு அதிகரித்திருந்தது. அப்போது அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் வாயு தொடர்பான பிரச்சனை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் தீபிகா கலந்துகொண்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மும்பையிலுள்ள வீட்டில் இருந்தபோது, தீபிகாவுக்கு உடல் நலம் பாதித்தது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதய பதற்றம் காரணமாகவே இம்முறையும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் கிடையாது. நலமாக இருக்கிறார் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, நேற்று மாலை அவர் வீடு திரும்பினார்.தற்போது தீபிகா, ஷாருக்கான் ஜோடியாக பதான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரபாஸ் நடிக்கும் பான் இந்தியா படம், ஹிரித்திக் ரோஷனுடன் ஃபைட்டர், அட்லீ இயக்கும் ஜவான் ஆகிய படங்களிலும் நடிக்கிறார்….

The post தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Dipika Padukone Hospital ,Mumbai ,Deepika Patukone ,Deepika Padukone Hospital ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...