×

சுபகிருது வருட சூரிய கிரகணம்

ஐப்பசி 8ந் தேதி (25-10-2022) செவ்வாய்க்கிழமை:

1) கிரகண ஆரம்பம் : மாலை மணி : 5.13

2) மத்யம காலம் : மாலை மணி : 5.39

3) மோட்ச காலம் : மாலை மணி : 6.11

(கிரகண முடிவு)

சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், திருவாதிரை நட்சத்திரங்களிலும், செவ்வாய்க்கிழமையிலும் பிறந்தவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்ளல் வேண்டும்.
அன்று காலை 9.30 மணிக்கு மேல் எதுவும் சாப்பிடக்கூடாது. நிரந்தர நோயுற்றவர்கள், வயோதிகர்கள், கருவுற்றுள்ள பெண்மணிகள், சிறுவர்கள் ஆகியோருக்கு விதிவிலக்கு.

கருவுற்றுள்ள பெண்மணிகள் அன்றைய தினம் பிற்பகல் 2லிருந்து சூரியனின் வெளிச்சம் படாமல் இருத்தல் அவசியம். வயிற்றில் வளரும் சிசு பாதிக்கப்படக்கூடும்.
தாய் - தந்தை இல்லாதவர்கள் சூரிய கிரகணம் பிடிக்கும்போது தர்ப்பணம் செய்வது அதிக பலனைத் தரும்.

Tags :
× RELATED சுந்தர வேடம்