நடிகைகளை வரைமுறை இல்லாமல் விமர்சிப்பவர்களுக்கு கடும் தண்டனை : பார்வதி கோபம்

இணைய தளங்களில் பெண்களை குறிப்பாக நடிகைகளை வரைமுறை இல்லாமல் விமர்சிப்பது, படுக்கைக்கு அழைப்பது என தகாத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்படுவதும் ஒரு சிலர் கைது செய்யப்படுவதும் பின்னர் அவர்கள் அதிலிருந்து தப்பிப்பதுமாக காட்சிகள் அரங்கேறுகின்றன. இதுகுறித்து நடிகை பார்வதி கூறியது: பல ஆண்டுகளாக இணைய தள செயல்பாடுகளில் நான் ஈடுபட்டிருக்கும் அனுபவத்திலிருந்து பெண்களை இழிவாகவும், தரகுறைவாகவும் விமர்சிப்பவர்களை கண்டிருக்கிறேன்.

அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுபற்றி வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித் திருக்கிறேன். அதன் மூலம் சைபர் கிரைம் சட்டப்படி சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க முடியும் என்பது தெரியவந்தது. ஆனால் அந்த சட்டங்கள் போதுமான வலுவுடன் இல்லை. அதில் பல்வேறு ஓட்டைகள் இருக்கின்றன. இதற்கென தனிப்படை ஒன்று இல்லை என்ற விவரம் எனக்கு தெரியவந்தது.

இணைய தள குற்றங்கள் பற்றிய புகார்களும் அதன் மீதான விசாரணையும் அதிக அளவில் உள்ளது. இதுபோன்ற குற்றங்களை எதிர்கொள்வதற்கும், அதற்குரிய  தண்டனை வழங்கவும் புதிய சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். தண்டனைகள் வழங்கப்படுவதில் உள்ள குறைபாடுகள் இதுபோன்ற குற்றங்கள் அதிகளவில் நடப்பதற்கு காரணமாக உள்ளது. இந்த ெசயல் எந்தவிதத்திலும் கிரிமினல் குற்றங்களுக்கு குறைந்தது அல்ல.

Related Stories:

>