×

பகமாலினி நித்யா

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இந்தத் தேவியின் மந்திரத்திலும், பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘‘பக’’ எனும் பதம் அடிக்கடி வருவதால் ‘‘பகமாலினி’’ என இந்த அம்பிகை அழைக்கப்படுகிறாள்.
பரிபூர்ணமான ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஸ்ரீ, ஞானம், வைராக்யம், வீர்யம், முக்தி போன்றவை ‘‘பகம்’’ என்ற சொல்லால் குறிக்கப்படுபவை. இவைகளுடன், அம்பிகை கூடியிருப்பதால் ‘‘பகமாலினி’’ ஆனாள். பகத்தோடு கூடிய சகல பொருட்களும் இந்த அம்பிகையின் அம்சமேயாதலால் இத்தேவிக்கு பகவதி எனும் பெயரும் உண்டு.

சிவந்த நிறமுள்ளவள் இவள். சிவப்புக் கற்களால் ஆன அணிகலன்களை அணிவதில் பிரியமுள்ளவள். அழகு பொலியும் திருமுகத்தினள். சதா தவழும் புன்முறுவலுடன் திகழும் இவள் முக்கண்களை உடையவள். இடது கரங்களில் அல்லிமலர், பாசக்கயிறு, கரும்பு, வில் போன்றவற்றை ஏந்தியும், வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களையும் தரித்துள்ளவள். தாமரைப் பூவில் அமர்ந்துள்ளாள்.

அழகுக்கு அழகு செய்யும் வண்ணம் அணிகலன்களோடு அருளும் இந்த அன்னையின் அருளுக்கு ஈடு இணை ஏது? இந்த அம்பிகையைச் சுற்றிலும் பல்வேறு சக்திக் கூட்டங்கள் சூழ்ந்துள்ளதாக மகான்கள் கூறுகின்றனர்.செருக்குடன் தோற்றமளிக்கும் இந்த அம்பிகை தைரியத்திற்கு அதிதேவதையானவள்.

வழிபடு பலன்

தன்னை வணங்குவோர்க்கு வாழ்வில் வெற்றிகளைக் குவிப்பவள். கர்ப்பத்திலுள்ள சிசுவைக் காத்து சுகப்பிரசவம் ஏற்பட அருள்பவள்.
பகமாலினி காயத்ரி
ஓம் பகமாலின்யை வித்மஹே
ஸர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.
மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆம் ஐம் பகபமே பகினி பகோதரி
பகமாலே பகாவஹே பககுஹ்யே பகயோனி பகநிபாதிநி
ஸர்வபக வஸங்கரி பகரூபே நித்யக்லின்னே பகஸ்வரூயே
ஸர்வாணி பகானிமே ஹ்யானய வரதே ரேதே ஸூரேதே
பகக்லின்னே க்லின்னத்ரவே க்லேதயத்ராவய அமோகே

பகவிச்சே க்ஷூப க்ஷோபய ஸர்வஸத்வான் பகேஸ்வரீ. ஐம்
ப்லூம் ஜம் ப்லூம் மேம் ப்லூம் மோம் ப்லூம் ஹேம் ப்லூம்
ஹேம் க்லின்னே ஸர்வாணி பகானிமே வஸமாயை ஸ்த்ரீம்-
ஹரப்லேம்-ஹ்ரீம்-ஆம் பகமாலினி நித்யகலா தேவி
ஸ்ரீபாதுகாம் பூஜயாமி நம:


வழிபட வேண்டிய திதிகள்

சுக்ல பட்ச த்வதியை / கிருஷ்ண பட்ச சதுர்த்தசி
(த்வதியை திதி ரூபிண்யை பகமாலின்யை நம:)

நைவேத்யம்

நாட்டுச் சர்க்கரை.

பூஜைக்கான புஷ்பங்கள்

மரிக்கொழுந்து, தவனம் போன்ற பச்சை நிற இலைகள், மலர்களால் பூஜிக்கவும்.

திதி தான பலன்


நாட்டுச் சர்க்கரையை நிவேதித்து தானம் செய்ய ஆயுள் விருத்தியாகும்.

தொகுப்பு: ஜெயலட்சுமி

Tags :
× RELATED சுந்தர வேடம்