×

வன்முறையை தூண்டும் வகையில் பேசுபவர்களை கைது செய்ய வேண்டும்: டிஜிபியிடம் தமிமுன் அன்சாரி புகார்

சென்னை: தமிழகத்தில் வன்முறையை தூண்டி பிரிக்கும் வகையில் பேசுபவர்களை பாரபட்சமன்றி கைது செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாமி டிஜிபியிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாமி நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக  நடந்து வரும் கசப்பான சம்பவங்கள் சகல தரப்பையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் அமைதியான சூழல் வலிமை பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். குற்றங்கள் தொடர்பில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் பேசுபவர்கள் பாரபட்சமின்றி கைது செய்யப்பட வேண்டும். சிறுபான்மையினரையும், பெரும்பான்மையினரையும் பிரிக்கும் வகையில் பேசி வரும் சங்பரிவார நபர்கள் உள்ளிட்டோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post வன்முறையை தூண்டும் வகையில் பேசுபவர்களை கைது செய்ய வேண்டும்: டிஜிபியிடம் தமிமுன் அன்சாரி புகார் appeared first on Dinakaran.

Tags : Tamimun Ansari ,DGP ,Chennai ,Human Democratic Party ,Tamil Nadu ,
× RELATED தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்