×

மகேஷ் பாபு படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்

ஐதராபாத்: மகேஷ்பாபுவின் படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. தோர், அவெஞ்சர்ஸ் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். பிரபல நடிகரான இவரை முதல்முறையாக இந்திய படத்தில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் டைரக்டர் ராஜமவுலி. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் ராஜமவுலியின் அடுத்த படம் தொடங்க உள்ளது. இதில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது. பல்வேறு வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்க கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தை தேர்வு செய்ய ராஜமவுலி விரும்புகிறார். இதையடுத்து தயாரிப்பு நிறுவனம், கிறிஸ்சுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது….

The post மகேஷ் பாபு படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் appeared first on Dinakaran.

Tags : Chris Hemsworth ,Hollywood ,Chris Hemsworte ,Maheshbabu ,Mahesh Babu ,
× RELATED அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த...