விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பார்வதி நாயர், அடுத்து மின்னல் வீரன் என்ற படத்தில் நடிக்கிறார். ஆதி நடிப்பில் வெளியான மரகத நாணயம் படத்தை இயக்கிய சரவணன் இதை இயக்குகிறார். அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.