×

கோலாகலமாக தொடங்கிய செங்கல்பட்டு தசரா திருவிழா… பண்டிகையின் முதல் நாளிலேயே ஏராளமான மக்கள் பங்கேற்பு

செங்கல்பட்டு: நவராத்தி விழா தொடங்கியதை அடுத்து செங்கல்பட்டில் முதல் நாளிலேயே தசரா பண்டிகையில் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். கொரோனா பரவல் காரணமாக செங்கல்பட்டில் தசரா பண்டிகை 2 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தசரா பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் மீண்டும் களைகட்டியுள்ளது. செங்கல்பட்டு நகராட்சி சார்பில் பழைய ஜிஎஸ்டி சாலையில் உள்ள வேதாச்சலநகர் ராமர்கோவில் பின்புறம் 10 நாட்கள் தசரா பண்டிகை நடைபெறுகிறது. தசரா வழக்கமான உற்சாகத்துடன் மீண்டும் களைகட்டியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செங்கல்பட்டு தசரா பண்டிகையையொட்டி அங்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் ஏராளமான கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. 10 நாட்கள் நடைபெறும் செங்கல்பட்டு தசரா திருவிழாவில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 50ற்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.    …

The post கோலாகலமாக தொடங்கிய செங்கல்பட்டு தசரா திருவிழா… பண்டிகையின் முதல் நாளிலேயே ஏராளமான மக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Dasara festival ,Chengalpattu ,Navarathi Festival ,Dasara festival ,Chenkalpattu Dasara Festival ,
× RELATED செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா