×

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை

மதுரை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: தென்மாவட்டங்களில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய காரியங்களில் ஈடுபடுவோர் அல்லது தூண்டுவோர் அல்லது கூட்டுச்சதி செய்வோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் அம்மாதிரியான காரியங்களில் ஈடுபடுவோர் தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். தென்மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். விளம்பரத்திற்காக தனக்குத்தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்றார். …

The post பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : South Zone IG Azra Karg ,Madurai ,South Zone IG Asra Karg ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!