×

அட்டர்னி ஜெனரல் பதவி வேண்டாம் ரோத்தகி அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக (ஒன்றிய அரசு தலைமை வழக்கறிஞர்) கே.கே.வேணுகோபால் இருந்து வந்தார். இவர் கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரின் பதவி காலம் 2020ம் ஆண்டுடன் முடிந்தது. இதையடுத்து, அவரின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. ஜூன் மாதம் வேணுகோபாலின் பதவி காலம் நிறைவடைந்தது. வேணுகோபாலுக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று  கூறப்பட்டது. ஆனால்,  91 வயதானதால்  அவர் மீண்டும் பதவி நீட்டிப்பை விரும்பவில்லை. இதனால், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகிக்கு ஒன்றிய அரசு அப்பதவியை வழங்கியது. ஆனால், இந்த பதவியை ஏற்க, நேற்றிரவு ரோத்தகி மறுத்து விட்டார். இதற்கான காரணங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை….

The post அட்டர்னி ஜெனரல் பதவி வேண்டாம் ரோத்தகி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rothaki ,Attorney General ,New Delhi ,KK Venugopal ,India ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...