×

வித்தியாச விநாயகர்

*திருவள்ளூரில் உள்ள திருப்பாசூர் வாகீஸ்வரர் கோயிலில் 11 வித்தியாசமான வடிவங்களைக் கொண்ட விநாயகர் சன்னதி உள்ளது. இதைவிநாயகர் சபை என்பர்.

*கடலூர் மாவட்டம் திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் கோயிலில் உள்ள ெபால்லாப் பிள்ளையார் சன்னதி விமானத்தில் 2 கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

*சிவகங்கை மாவட்டம் பாகனேரி புல்வன நாயகி அம்மன் கோவிலில் காய்ந்தவ கால கணபதி அருள்பாலிக்கிறார். மழை இல்லாத காலங்களில் இந்த சிலையின் மூக்கை தொடுமளவு தண்ணீர் நிரப்பி விடுவார்கள். இவ்வாறு செய்தால் மழை பெய்யும். மழை பெய்யும் வரை இந்நீரை அகற்றுவதில்லை.

*காஞ்சிபுரம் ஓணகாந்தன் தளி ஓணகாந்தேஸ்வரர் கோயிலில் உள்ள கருவறை மண்டப வாசலில் உள்ள ஒரு சுவரில் விநாயகர் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே காதை வைத்துக் கேட்க ‘ஓம்’ என்ற நாதம் மெல்லியதாக ஒலிக்கும்.

*பொள்ளாச்சி சண்முகபுரம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் இரட்டை முகத்துடன் கூடிய துவிஜ முக விநாயகர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். இவரை வழிபட நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.
*தஞ்சாவூர் மாவட்டம் திருவலச்சுழி வலஞ்சுழிநாதர் கோவிலில் உள்ள சுவேத விநாயகர் என்னும் வெள்ளை பிள்ளையார் 9 அங்குல உயரமே உள்ளவர். கடல் நுரையினால் ஆன இவருக்கு பச்சை கற்பூரம் மட்டுமே சாத்துவர்.

*கேரளபுரம் சிவன் கோவிலின் வெளிப்புறம் நிறம் மாறும் விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவர் ஆவணி முதல் தை வரையுள்ள ஆறு மாதக் காலம் வெள்ளை நிறமாகவும், மாசி முதல் ஆடி மாதம் வரை கறுப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார். இந்த சிலை சந்திரகாந்தக் கல்லால் உருவாக்கப்பட்டது. இந்த விநாயகரின் ஒரு கால் ஒடிந்த நிலையில் உள்ளது.

*விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்துப் பிள்ளையார் காட்சி தருகிறார். 18 அடி ஆழத்தில் கிழக்கு நோக்கி இவரது சன்னதி உள்ளது. இவருக்கு தனியாக கொடி மரமும் உண்டு. விநாயகருக்குரிய ஆறுபடை வீடுகளில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது.

*மதுரை அருகே வாடிப்பட்டியிலுள்ள வல்லப கணபதி கோவிலில் மாங்கல்ய பிரசாதம் தரப்படுகிறது. இந்த விநாயகருக்கு செய்யும் பூஜையின் போது இப்பொருட்களை வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. இவர் மங்கலம் தரும் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.


தொகுப்பு:மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

Tags : Ganesha ,
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி