×

அற்புத பலன்களை அள்ளித் தரும் அனந்த விரதம்

அனந்தன் என்றால் பகவான் மகா விஷ்ணுவைக் குறிக்கும். அனந்தனுக்கு உரிய பிரத்தியேக விரதம் இது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தில் கடும் துயரத்தில் இருந்தபோது, சாட்சாத் கிருஷ்ண பகவானே அவர்களுக்கு அனந்தபத்மநாப விரதத்தின் சிறப்பைச்  சொன்னார். இதை தொடர்ந்து 14 ஆண்டுகள் செய்ய வேண்டும். சிவப்பு நிற ஆடை அணிந்து செய்வது சிறப்பு. வீட்டை தூய்மைப் படுத்தி, பூஜையறையில் பெருமாள் படத்தை அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும். கலசம் வைத்தும் செய்யலாம்.

நிவேதனமாக அதிரசம், போளி, பால் பாயாசம், சித்ரான்னங்கள் வைத்துப் படைக்கலாம். வாழைப்பழம் தாம்பூலம் வைத்தாலும் 14 எண்ணிக்கையில் வைத்து வணங்க வேண்டும். வரலட்சுமி விரதம்போல நோன்புக் கயிறு உண்டு. கயிறு சிவப்பு நிறத்தில் 14 முடிச்சுகள் போட வேண்டும். மகாவிஷ்ணுவுக்குரிய மந்திரங்களையும், ஸ்தோத்திரங்களையும் சொல்லி, தூபதீபம் காட்டி நிவேதிக்க வேண்டும். நோன்புக் கயிற்றை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.

விரதம் முறையாக இருக்க முடியவில்லை என்று சொன்னால், குறைந்தபட்சம் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலுக்குச் சென்று, நெய்தீபம் போட்டு துளசி மாலை சாத்தி வணங்கி வரலாம். அருகாமையில் பள்ளிகொண்ட பெருமாள் இல்லை என்று சொன்னால், ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரையே பள்ளிகொண்ட பெருமாளாக நினைத்து வணங்கலாம். எப்படியும் அன்று மாலை பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வருவது நல்லது. அனந்த பத்மநாப பூஜை என்பது சகல துக்கங்களையும் விரட்டுவது. குலவிருத்திக்கு உதவுவது.

Tags : Ananta Vratam ,
× RELATED அற்புத பலன்களை அள்ளித் தரும் அனந்த விரதம்