×

நீடாமங்கலத்தில் நடைபெற்ற பனை திருவிழா: பெண்களை கவரும் வகையில் பனையோலைப் பொருட்கள் கண்காட்சி

திருவாரூர்: மன்னார்குடி அருகே நீடாமங்கலத்தில் நடைபெற்ற பனை திருவிழா அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு செயல்பட்டு வரும் சுற்றுசூழல் அமைப்பின் சார்பில் நடந்த பனை திருவிழாவை பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவர் திரு.நாராயணன் தொடங்கி வைத்தார். பனை மரத்தின் பெருமையை விளக்கும் பாடல்களுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பனை மரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு விதமான பனையோலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பனையோலையில் செய்யப்பட்ட கொட்டான்கள் முதல் கைப்பைகள் வரை அனைவரையும் கவர்ந்தன. பனையோலையால் அழகாக உருவாக்கப்பட்டிருந்த மாலைகள் திருவிழாவுக்கு வந்தவர்களை ஆச்சிரியப்படுத்தின. வித விதமாக அணிவகுத்த கி செயின்களும் ரசிக்கவைத்தன. பனையோலையில் உருவாக்கப்பட்ட ஸ்டட் எனப்படும் காதணிகளும் தங்க நிறத்தில் ஜொலித்த அட்டிகையும் பெண்களை கவர்ந்திழுத்தன. பனை கிழக்கில் செய்யப்பட்ட பனை அல்வா அனைவரையும் ருசி பார்க்க தூண்டியது. பனை திருவிழாவை முன்னிட்டுபாரமப்பரிய விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.   …

The post நீடாமங்கலத்தில் நடைபெற்ற பனை திருவிழா: பெண்களை கவரும் வகையில் பனையோலைப் பொருட்கள் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Palm festival ,Needamangalam ,products ,Tiruvarur ,Neetamangalam ,Mannargudi ,
× RELATED நீடாமங்கலத்தில் வழிபறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது