பாடல் கற்க வந்த பெருமாள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருக்கண்ணமங்கைத் திருக்கோயிலில் உறையும் கண்ணன் திருஉருவப் பெருமாள் திருமங்கையாழ்வாரிடம் பாடல் கேட்க, மண்ணுலகில் அவதரித்தார் என்பது இறையடியார் நம்பிக்கை. திருக்கண்ணமங்கைத் திருத்தலத்தின் மீது திருமங்கையாழ்வார் அருளிய பதிகத்தின் கடைசிப் பாவினில், இத்தலத்தின் மேல் தாம் உரைத்த பத்துப் பாக்களைக் கற்றவர்கள் ‘விண்ணில் விண்ணவராய் மகிழ்வெய்துவர்’ என்று கூறுவதோடு, கண்ணனிடம், ‘கண்ணா’ நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே’ என்றும் பாடினார்.

இதனுடைய பொருள் ‘கண்ணனே, நீ கூட இப்பாக்களைக் கற்க நினைத்தால் கற்கலாம்’ என்பதேயாகும். இறைவனையே ‘பாடல் கற்றுக்கொள்ள வேண்டுமானால் கற்றுக்கொள்’ என்றார். ‘நீ விரும்பினால் கற்றுக்கொள்ளலாம்’ என்ற இச்செயல் கேட்டுக் கண்ணனே மாணவராய் வந்து பாடல் கற்றாராம். அது எப்படி?

பாடலைக் கற்கக் கண்ணன் பெரியவாச்சான் பிள்ளையாகவும், பாடலைக் கற்றுத்தரும் பொருட்டுத் நம்பிள்ளையாக, அவருடைய ஆசானாகத் திருமங்கையும் அவதாரம் செய்தனராம். கண்ணன் ரோகிணி நட்சத்திரத்தில் பெரியவாச்சான் பிள்ளையாகவும், கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில், நம்பிள்ளையாகத் திருமங்கையும் அவதரித்தனர் என்பர்.

தொகுப்பு: ந.க.மங்கள முருகேசன்

Related Stories: