×

பெரம்பூர், எருக்கஞ்சேரி கழிவுநீரகற்று நிலையங்கள் 2 நாள் செயல்படாது

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தண்டையார்பேட்டை பகுதிக்குட்பட்ட எருக்கஞ்சேரி கழிவுநீரகற்று நிலையத்திற்குள், பெரம்பூர் மற்றும் எருக்கஞ்சேரி கழிவு நீரகற்று நிலையங்களை இணைக்கும் 900 மில்லி மீட்டர் விட்டமுள்ள கழிவுநீர் குழாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை மதியம் 12 மணி முதல் 27ம்தேதி மாலை 6 மணி வரை இந்த கழிவுநீர் நீரகற்று நிலையங்கள் செயல்படாது. எனவே, பகுதி 4 மற்றும் 6க்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பகுதி பொறியாளர்களை 81449 30904,  81449 30906,  81449 30908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். …

The post பெரம்பூர், எருக்கஞ்சேரி கழிவுநீரகற்று நிலையங்கள் 2 நாள் செயல்படாது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Erikhanjeri Sewage Stations ,Chennai ,Chennai Drinking Water Board ,Erukjeri Wastewater Treatment Plant ,Dandarabpet ,Erukhjeri Wastewater Treatment ,Dinakaraan ,
× RELATED நாய்கள் தொல்லை மாநகராட்சியில் புகார்