மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச்சிலை

பிரபலங்களின் மெழுகுச்சிலையை அச்சு அசல் அப்படியே தயாரிக்கும் நிறுவனம் மேடம் டுசாட்ஸ். இந்நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகம் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்குமெழுகுச் சிலை வைத்துள்ளது. இந்த மெழுகுச் சிலையை நடிகை அனுஷ்கா சர்மாவே திறந்து வைத்தார். அந்த சிலை அப்படியே அனுஷ்கா போன்றே உள்ளது. தனது சிலையை திறந்து வைத்த அனுஷ்கா அதனுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளில் அனுஷ்காவின் சிலைக்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு. அனுஷ்காவின் சிலை பேசும். மேலும் அதன் கையில் உள்ள கேமரா மூலம் செல்ஃபி எடுக்க முடியும். பாலிவுட் பிரபலங்கள் ஐஸ்வர்யா ராய், ரித்திக் ரோஷன், கரீனா கபூர் உள்ளிட்ட பலருக்கும் மெழுகுச் சிலை வைக்கப்பட்ட போதிலும் அவை பேசாது. அனுஷ்காவின் கணவரான கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

× RELATED அனுஷ்கா ஷர்மாவுக்கு வலை