×

இன்னும் ஒரு சில ஆண்டில் உலகில் முதன்மை நாடாக இந்தியா திகழும்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள சனி பகவான் கோயில் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இஸ்ரோ முன்னாள் தலைவரும் விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் சிறப்பு வழிபாடு மற்றும் ஆயுஷ் ஹோம பூஜையில் பங்கேற்றார். இதன்பின்னர் மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தில் 27வது குருமகா சன்னிதானம்  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரை சந்தித்து குடும்பத்துடன் ஆசி பெற்றார்.இதன்பிறகு சிவன் அளித்த பேட்டி:செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பும் முயற்சி, வீனஸ் உள்ளிட்ட மற்ற கோள்களுக்கும் செயற்கைக்கோள் அனுப்புவதற்கான பணிகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியா உலகத்தில் முதன்மையான நாடாக திகழ போகிறது. தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும். மாணவர்கள், தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்கவேண்டும். இவ்வாறு சிவன் கூறினார்….

The post இன்னும் ஒரு சில ஆண்டில் உலகில் முதன்மை நாடாக இந்தியா திகழும்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,ISRO ,Sivan ,Karaikal ,Sani Bhagavan temple ,Tirunallar ,Puducherry ,Amirthakadeswarar ,Thirukkadaiyur ,Mayiladuthurai ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...