×

பட்டாசு தயாரிப்பாளர்களிடம் பழைய பாசத்தில் மாமூல் கேட்கும் இலை கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியினர் ஆட்சி போன பிறகும் பழைய நினைவுகளில் இருந்து மீளவில்லை போல இருக்கே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மெடல் மாவட்டத்தின் பட்டாசு நகரில் கடந்த இலைக்கட்சி காலத்தில், அப்போதைய மந்திரி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் துவங்கி பலரும், அதிகாரிகள் துணையோடு தீபாவளிக்கென ஓசிப்பட்டாசு வேட்டை நடத்தி வந்திருக்கின்றனர். பட்டாசு ஆலை அதிபர்களுடன், பட்டாசு விற்போரையும் இருபது சதவீதத்திற்கும் அதிகமாக வழங்கும் ஓசி பட்டாசு நடைமுறை ரொம்பவே தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி வந்திருக்கிறது. புதிய ஆட்சிக்குப்பிறகு இந்த ஓசி வேட்டை நிறுத்தப்பட்ட நிலையில், நகருக்குள் இருக்கிற முந்தைய இலைக்கட்சிக்காரர்கள், சில அதிகாரிகள் துணையோடு இப்போது வசூல் வேட்டையை துவக்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சீன பட்டாசு வருகை, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளினால் பட்டாசு தொழில் பல்வேறு சிரமங்களை நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. தீபாவளி நெருங்கும் நிலையில் இப்போதே கடந்த காலத்து நினைப்போடு, இலைக்கட்சிக்காரர்களும், இவர்களுக்கான ஆதரவு அதிகாரிகளும் பட்டாசு நகரில் துண்டைப் போட்டு வசூலிப்பதில் குறியாக இருக்கின்றனராம். இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்குபவர்களை கண்காணிக்க, தற்போதைய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். சில இலைக்கட்சிக்காரர்களும் உளவுப்பிரிவின் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருக்கின்றனர். இது காலம்தோறும் வசூல் வேட்டை நடத்தி வந்த இலைக்கட்சி நிர்வாகிகள், இவர்களது ஆதரவு அதிகாரிகள் வயிற்றில் புளி கரைக்கத் துவங்கி இருக்கிறது…’’ என்றார் விக்கியானந்தா.‘‘அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைச்ச மாங்கனியார், அப்படி என்ன சொன்னாராம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ரெண்டா பிஞ்சுபோன இலைக்கு நான் தான் சொந்தக்காரன் என்பதை நிரூபிப்பேன், அதற்காக சூறாவளி சுற்று பயணத்தை தொடங்கப்போறேன்னு மாங்கனி மாஜி புறப்பட்டிருக்காராம். இதற்கான முதல் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமா நடத்திக்காட்டணும் என்று, மாங்கனி புறநகர் மாவட்ட செயலாளரான அவரது நிழலுக்கு உத்தரவு போட்டிருக்காரு. அவரும் தடபுடலாக ஏற்பாடுகளை செஞ்சாராம். ஏரியாவுக்கு ஏற்றதுபோல ரூ200, ரூ250, குவாட்டர், தண்ணீர் பாட்டில் என சரக்கு வாகனத்துல ஏத்திக்கிட்டு போயி இறக்கியிருக்காங்க. 6 மணிக்கு மேடைக்கு வந்திடுவேன்னு மாஜி சொன்னாராம். ஆனால் கூட்டத்தை கொண்டு வந்து இறக்குவதில் தாமதமாகி விட்டதாம். இதனால் மாஜியை எப்படி அழைப்பதுன்னு தெரியாம தவிச்ச தொகுதி எம்எல்ஏ, நிழலானவருகிட்ட பேசி 7 மணிக்கு வரச்சொல்லுங்கன்னு சொல்லியிருக்காரு. இதனால கோபமான நிழலு, உன்னை நம்பி பொறுப்பை ஒப்படைச்சேன், கூட்டம் இல்லாம நான் கூப்பிடமாட்டேன், நீயே கூப்பிடுன்னு தட்டிக்கழிச்சாராம். இரவு 7.20 மணிக்கு மேடைக்கு வந்த மாஜி மாங்கனியார், மைக்கை பிடிச்சி அரைச்ச மாவையே மீண்டும் அரைச்சாராம். என் இதயத்தில் உருவான திட்டம், யாரும் கேட்காத திட்டத்தை கொண்டாந்தேன்னு வாய்வலிக்க பேசினாராம். பேச்சில ஒண்ணும் இல்லையேன்னு மாஜி பேசிக்கிட்டிருக்கும்போதே, கட்சிக்காரங்க துண்டை தூக்கி தோளில் போட்டுக்கிட்டு கிளம்பிட்டாங்களாம். இதனால ஷாக்கான மாங்கனியார், கூட்டத்தை வேகவேகமா முடிச்சிட்டாராம். இந்த கூட்டத்துல தான் மாங்கனியாருக்கும், அவரது நிழலானவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பது கட்சிக்காரங்களுக்கு தெரியவந்திருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைகட்சியில் மாஜி அமைச்சருக்கு எதிராக தேசியக்கட்சி போட்ட அசைன்மென்ட், என்னவாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த மூன்று எழுத்து நடிகரின் பெயரை கொண்ட இலை கட்சியை சேர்ந்தவர், மாஜி லா அமைச்சருக்கு நெருக்கமானவராம். 2001ம் ஆண்டில் இருந்த லா அமைச்சருடன் வலது கரமாக இருந்து வந்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மாவட்டத்தின் கூட்டுறவு வங்கி தலைவர் பதவியை தற்போது வரை ருசித்து வருகிறாராம். நெடுஞ்சாலை ஒப்பந்தத்திலும் கொடிகட்டி பறந்தவர், மொத்தத்தில் மாஜி அமைச்சரால் உச்சத்தை தொட்டவர் மூன்று எழுத்து பெயரை கொண்டவர். இந்த நிலையில் இலை கட்சி போற, போக்கை பார்த்து அவர் மாற்றுக்கட்சிக்கு செல்ல ஒரு மாதமாக திட்டமிட்ருந்தாராம். இதற்காக குடும்ப உறவு ஒருவர் தாமரை கட்சியில் இருக்க அவரிடம் ஆலோசனை கேட்டிருந்தாராம். கடைசியில் தாமரை கட்சி தலைவர் மதுரைக்கு அண்மையில் வந்தபோது அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து கட்சியில் இணைந்து விட்டாராம். மாவட்ட தலைவர் பதவி, எம்பி சீட்டு என பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளாராம். இதனை ஏற்கும் பட்சத்தில் தான் கட்சியில் இணைந் ததை வெளிப்படையாக அறிவிக்க போவதாகவும் தெரிவித்துள்ளாராம். இலை கட்சியில் பதவி, பணம் சுகத்தை அனுபவித்து விட்டு கடைசியில் சொல்லாமல் மாற்றுக் கட்சிக்கு ஓடியதால் திண்டிவனத்தைச் சேர்ந்த மாஜி லா அமைச்சர் அப்செட்டில் இருக்கிறாராம். தேசிய கட்சிக்கு புதுசா வந்துள்ள அவர் இலை ஆட்சியில் சம்பாதித்த பல கோடி சொத்து இருப்பதால், அவரை வைத்து அரசியல் நடத்தவும் திட்டமிட்டு இருக்காங்களாம் லோக்கல் தாமரை கட்சி நிர்வாகிகள். குறிப்பாக மாஜி லா அமைச்சருக்கு எதிர்ப்பாக அரசியல் செய்து, இலை கட்சியிலிருந்து பெரும் கூட்டத்தை பிரித்து கொண்டு வந்து சேர்க்கணும்னு அசைமென்ட்டும் கொடுத்திருக்காங்கலாம் தாமரை கட்சி தலைமை…’’ என்றார் விக்கியானந்தா.  …

The post பட்டாசு தயாரிப்பாளர்களிடம் பழைய பாசத்தில் மாமூல் கேட்கும் இலை கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Mamool ,Yananda ,Peter ,Fireworks ,Mamul ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...