×

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறும் என நம்பிக்கை: புதுப்பொலிவு பெரும் சென்னை வில்லிவாக்கம் ஏறி

சென்னை : மலை பிரதேசங்கள் வெளிநாடுகளில் உள்ளதை போன்ற தொங்கு பாலத்தினுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா சென்னைக்கு சாத்தியமா நிச்சயம் சாத்தியமே. அதுவும் பரபரப்பாக இயங்கும் பிராதன சாலைகளுக்கு இடையே இயற்கை எழிலுடனும், நவீன கட்டமைப்புடனும் பொழுதுபோக்கு பூங்காவாக மாற உள்ளது சென்னை வில்லிவாக்கம் ஏறி. நாளுக்கு நாள் மக்கள் தொகை, போக்குவரத்து நெரிசல், கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சென்னையில் மிஞ்சியுள்ள நீர் நிலைகளை பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல சென்னை மாநகராட்சி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக குளங்கள், ஏரிகள் தூர்வாரி மீட்டெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதேபோல, வில்லிவாக்கம் சிக்கோ நகர் பகுதியில் உள்ள 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை மறு சீரமைப்பு செய்து பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் 37 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை எழிலுடன் கூடிய இந்த ஏரியில் நடைப்பயிற்சி செய்வதற்கான வசதி, குழந்தைகள் பூங்கா, விளையாட்டு மைதானம், திறந்தவெளி திரையரங்கு, கண்கவர் LED விளக்குகள், செயற்கை நீரூற்று உள்ளிட்டவைகள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக ஏரியின் ஒரு கரையில் இருந்து மறுக்கரையை கடந்து செல்லும் வகையில் கண்ணாடி தொங்கு பாலம் ஒன்றை அமைக்கப்பட்டு வருவது இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பு. சிங்கப்பூரில் உள்ள தொங்கு பாலத்தை மாதிரியாக கொண்டு இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் இரு கரைகளிலும் தண்ணீருக்கு மிக அருகில் உணவகங்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் பணிகள் முழுமை பெரும் நிலையில் இந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் அண்ணா மேம்பாலம், கத்திப்பாரா மேம்பாலங்களின் வரிசையில் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.   …

The post சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறும் என நம்பிக்கை: புதுப்பொலிவு பெரும் சென்னை வில்லிவாக்கம் ஏறி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pudupolivu ,Chennai Villivakam ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...