×

பாலாறு, ஓடைகளில் சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற கோரிக்கை

உடுமலை:  தளி- ஆனைமலை சாலையில், கரட்டுமடத்தில் இருந்து தேவனூர்புதூர் செல்லும் வழியில் அனுமந்தப்பட்டணம் கிராமத்தில் பாலாறு செல்கிறது. இந்த பாலாற்றில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகிறது. இங்கு பதுங்கியுள்ள விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இந்த சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறையினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், தண்ணீர் செல்வதும் பாதிக்கப்படும். எனவே, மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், குடிமங்கலம் ஒன்றியம் ராமச்சந்திராபுரத்திலும் ஓடையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை பருவமழைக்கு முன்பாக இவற்றை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பாலாறு, ஓடைகளில் சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palaru ,Anumanthapattanam ,Thali- Anaimalai road ,Garattumadam ,Devanurputur ,Dinakaran ,
× RELATED புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்