×

அடிக்கடி விபத்து ஏற்படும் காக்காதோப்பு பிரிவு; நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வேடசந்தூர்: வேடசந்தூர் காக்காதோப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேடசந்தூர் பகுதியில் உள்ள தேசிய நான்குவழிச் சாலையாக கடந்த 2006ம் ஆண்டு நிறைவடைந்து சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும் 2007ம் ஆண்டு முதல் அனைத்து வாகனங்களும் கனரக வாகனங்கள், நீண்ட தூர பேருந்துகள் அனைத்தும் தேசிய நான்குவழிச் சாலை வழியாக சென்று வருகிறது. திண்டுக்கல்லில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வேடசந்தூர் நகர பகுதிக்குள் வருவதற்கு காக்காதோப்பு பகுதியில் பிரிந்து வரவேண்டிய நிலை உள்ளது. இந்த இடத்திலிருந்து நகரப் பகுதிக்குள் வாகனங்கள் திரும்பும் பொழுது தேசிய நான்கு வழிச்சாலை பகுதியில் வரக்கூடிய வாகனங்கள் மோதி தொடர் விபத்துக்களை சந்திப்பதும், வாகனங்கள் பலத்த சேதமடைந்து உயிர் சேதங்கள் ஏற்ப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதே போன்று கருக்காம்பட்டி பகுதியிலும் தொடர் விபத்துகளும் உயிரிழப்புக்களும் வாகன சேதங்களும் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கருக்காம்பட்டி பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் சிறு வாகனங்கள் சென்று வர மேம்பாலம் அமைக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர். நீண்ட நாட்கள் கோரிக்கை வைத்தும் செவிசாய்க்காததால் போராட்டத்திலும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ரூ.19 கோடி மதிப்பில் மேம்பாலம் கரூர் சாலையில் இருந்து திண்டுக்கல் சால ைவரை 670 மீட்டர் நீளத்திற்கு அளவிற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இது போக தனியாக சர்வீஸ் ரோடு அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தில் நான்கு வழிச்சாலைகள் மட்டுமே உள்ள நிலையில் எதிர்காலத்தில் ஆறு வழிச்சாலையாக மாறக்கூடிய வாய்ப்பைக் கருத்தில் கொண்டு இந்த இடத்தில் மட்டும் ஆறு வழிச்சாலை அமைக்கப்படும் சர்வீஸ் ரோடு விரைவில் பாலம் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காக்காதோப்பு பகுதியில் இதேபோன்று மேம்பாலம் அமைக்கப்பட்டால் மட்டுமே அடிக்கடி விபத்துக்கள் ஏற்ப்படுவது தவிர்க்கப்படும். இதுகுறித்து சமூக ஆர்வலர் தேன் ராஜ், ‘‘கருக்காம்பட்டி பகுதியில் ரூ.19 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதேபோன்று காக்காதோப்பு பகுதியில் மேம்பாலம் அமைத்து விபத்துக்களை தடுக்கும் வகையிலும் வாகனங்கள் சேதம் அடைவதை குறைக்கும் வகையிலும் மேம்பாலம் அமைத்தால் நன்றாக இருக்கும். மேலும் விபத்துக்கள் குறையும் உயிரிழப்புகள் குறையும் இந்த இடத்தில் அதிகமான வாகனங்கள் வந்து செல்வதோடு மட்டுமின்றி வேடசந்தூர் நகர பகுதிக்குள் வந்து செல்ல வேறு வழி இல்லாமல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தின் சாலை விரிவாக்க பணியை கருத்தில் கொண்டும் கருக்காம்பட்டிபகுதியில் அமைவது போன்ற பாலத்தை கருக்காம்பட்டி அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது’’ என்றார்….

The post அடிக்கடி விபத்து ஏற்படும் காக்காதோப்பு பிரிவு; நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cockpit ,Vedasandur ,Kakathoppu ,Dinakaran ,
× RELATED திண்டுக்கலில் அறுந்து கிடந்த...