கடன் பிரச்சனை தீர வேண்டுமா?: கேட்ட வரங்களை வாரி வழங்கும் பெருமாள் வழிபாடு..!!

நாம் கேட்ட வரங்களை, நாம் கேட்ட செல்வங்களை அள்ளி கொடுப்பவர் பெருமாள். ஆடம்பர பிரியர் பெருமாள். மகாலட்சுமியை தன்னுடைய நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர் பெருமாள். இத்தனை பெருமைகள் கொண்ட எம்பெருமானை எந்த கிழமையில் வழிபட்டால் நம்முடைய பணப்பிரச்சனை தீரும். இப்போதே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

வாரம்தோறும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று உங்களுடைய வீட்டிலும் நீங்கள் பெருமாள் வழிபாட்டை செய்யலாம். கோவிலுக்கு சென்றும் பெருமாளையும் தாயாரையும் வழிபாடு செய்யலாம். பெருமாள் வழிபாடு செய்யும்போது துளசி மாலையோடு சென்று வழிபாடு செய்வது மேலும் சிறப்பைத்தரும். எவர் ஒருவர் விடாமல் செவ்வாய்க்கிழமைகளில் பெருமாள் வழிபாட்டை மனதார செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பெரிய அளவில் வராது என்பது நம்பிக்கை.

உங்களுக்கு யாருக்காவது அவசர தேவைக்கு கடனை கொடுத்திருப்பார்கள். அவர்கள், உங்களுக்கு கொடுத்த கடனை திருப்பி கேட்கும்போது, கடனை திருப்பிக் கேட்பவருடைய, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, நீங்கள் தக்க சமயத்தில் கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நமக்கு உதவி செய்த, நமக்கு கடன் கொடுத்தவரை சாபம் விடக்கூடாது.

நமக்கு கஷ்டம் வரும்போது நமக்கு உதவி செய்த மனிதர்களை எந்த சூழ்நிலையிலும் எக்காரணத்தைக் கொண்டும் நாம் சபிக்கவே கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாருக்கேனும் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றாலும், நல்லதை மட்டுமே நினைத்து, நல்ல எண்ணத்தோடு வேண்டுதல் வைத்தால் மட்டுமே அது பலிக்கும்.

Related Stories: