×

புழல் பகுதிகளில் உள்ள தெரு பெயர் பலகை உடைப்பு

புழல்: புழல், காவாங்கரை, கன்னடபாளையம், கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், கலெக்டர் நகர், புத்தகரம், சூரப்பட்டு, சண்முகபுரம், லட்சுமிபுரம், ரெட்டேரி, கடப்பா சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரும்பு பைப்பிலான நவீன தெரு பெயர் பலகைகள் பொருத்தப்பட்டன. நாளடைவில் சிலர், இந்த தெரு பலகைகளில் போஸ்டர் ஒட்டியும் உடைத்தும் நாசமாக்கினர். தற்போது மேற்கண்ட வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து தெரு பெயர் பலகைகளும் காணாமல் போய்விட்டன. இதனால் இப்பகுதிக்கு புதிதாக வருபவர்கள் மற்றும் தபால்துறை ஊழியர்கள், தாங்கள் செல்ல வேண்டிய தெருக்களை அறிய முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தெரு பலகைகளை சீரமைக்கும்படி மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் தாமதப்படுத்துகின்றனர். எனவே, காணாமல் போன தெரு பலகைகளை மீண்டும் பொருத்தி சீரமைக்க மாநகராட்சி உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்….

The post புழல் பகுதிகளில் உள்ள தெரு பெயர் பலகை உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Cyclone ,Kavangara ,Kannatapalayam ,Kadrivedu ,MGR Nagar ,Collector Nagar ,Buddhakaram ,Surapattu ,Salamukpuram ,Lakshumipuram ,Retary ,Kadappa ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கம், வங்கதேசத்தில் கடும்...