கோலிவுட்டில் தடுமாறும் தமன்னா

தமிழில் முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக நடித்து வந்த தமன்னா ஒரு கட்டத்தில் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தினார். சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக தமிழ் பக்கம் தலைகட்டாமலிருந்தவர் பின்னர் மீண்டும் தமிழ் படங்களில் கவனத்தை திருப்பினார். ஆனால் முன்னர் வந்த வாய்ப்புகள்போல் ரீஎன்ட்ரியின்போது கிடைக்கவில்லை. ஆனாலும் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை கைப்பற்றி வந்தார்.

இந்த ஆண்டில் அவர் தமிழில் கண்ணே கலைமானே, தேவி 2ம் பாகம் என 2 படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சாய்பல்லவி என இளம் நடிகைகள் வரவால் தமன்னா உள்ளிட்ட சில சீனியர் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் குறைந்திருக்கிறது என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

இதையடுத்து சீனியர் நடிகைகள், இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்குகின்றனர். அந்த வகையில் தமன்னாவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள, ‘தட் ஈஸ் மகாலட்சுமி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தியில் நடிகை கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தின் ரீமேக் ஆகும்.

Tags : Tamanna ,Koli ,
× RELATED இரண்டு ஹீரோக்களுடன் மீண்டும் ஜோடி போட தமன்னாவுக்கு ஆசை