×

ஆற்றங்கரையோரம் மட்டுமே ஆடிப்பெருக்கை கொண்டாட வேண்டும் என்பதில்லை, வீட்டிலும் கொண்டாடலாம்

ஆடிபதினெட்டாம் பெருக்குவிழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக் கூறுவர். உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் விதைப்பர். காவிரிக் கரையோரம் மட்டுமே ஆடிப்பெருக்கை கொண்டாட வேண்டும் என்பதில்லை. நம்வீட்டிலும் எளிய முறையில் கொண்டாடலாம். ஒருசெம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போட வேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்துவிடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப்பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களின் மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டது போல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுதல் செய்ய வேண்டும். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை வணங்கி, பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரைச் செடிகளில் ஊற்றவேண்டும். பின்னர் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

Tags : Aadiperu ,
× RELATED ஜேடர்பாளையம் காவிரியில் குவிந்த மக்கள்