×

வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல், செப்பு நாணயம் கண்டெடுப்பு

சிவகாசி : வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான முத்திரை, செப்பு நாணயங்கள், சங்கு வளையல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் வைப்பாற்று வடகரையில் உள்ள மேட்டுக்காடு பகுதியில் கடந்த மார்ச் முதல், முதற்கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு 10 குழிகளில் நடந்த அகழாய்வில் பகடைக்காய், முத்து, டெரகோட்டாவாலான விளையாட்டு பொருட்கள், தந்தத்தால் ஆன அணிகலன்கள், சுடுமண் குவளை, புகைபிடிப்பான், அகல் விளக்கு, கற் சுவர், ஜல்லிக்கட்டு காளை, வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பம் உள்பட பல அரிய வகை பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.   நேற்று முன்தினம் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல், போர் வீரர்கள் உருவம் பொறித்த செப்பு நாணயம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘‘வெம்பக்கோட்டை அகழாய்வு பணியில் இதுவரை தமிழர்களின் கலாச்சாரம், நாகரிகம், வணிகம் தொடர்பான பல அரிய வகை பொருட்கள் கிடைத்துள்ளன.  முதற்கட்ட அகழாய்வு பணிகள் இம்மாத இறுதியில் நிறைவு பெறுகிற்து. இதில், கண்டெடுக்கப்பட்டுள்ள தொன்மையான பழங்காலப் பொருட்கள் தொல்லியல் துறையின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்….

The post வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல், செப்பு நாணயம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Vembakotta ,Sivakasi ,Virudhunagar district ,Sivakasi… ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே வெடி விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு