×

திருவிடைமருதூர் பள்ளி, கல்லுாரி நேரங்களில் அரசு பஸ்களில் தொங்கியபடியே செல்லும் மாணவர்கள்-டிராக்டர், லோடு ஆட்டோவை நிறுத்தி லிப்ட் கேட்க வேண்டிய அவல நிலை

திருவிடைமருதுார் : திருவிடைமருதூர் வட்டாரத்தில் பள்ளி, கல்லுாரிகள் செல்ல வேண்டிய நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் ‘லிப்ட்’ கேட்டு செல்ல வேண்டிய அவலநிலை நிலவி வருகிறது.திருவிடைமருதூர் தாலுகா திருவிடைமருதுார், ஆடுதுறை, ஆவணியாபுரம், திருமங்கலகுடி, தியாகராஜபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் உள்ளன. இக்கல்வி நிறுவனங்களில் பெரும்பாலும் கிராமப்புற மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அரசு பஸ்களில் சென்று வருவதற்கு மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வழி தடங்களில் அவ்வப்போது செல்லும் தனியார் பஸ்களில் கட்டணம் கொடுத்து மாணவர்கள் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.மேலும் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பஸ்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிறது. ஆனால் ஏற்கனவே இத்தடத்தில் இயங்கி வந்த பஸ்கள் தான் இயக்கப்படுகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கவில்லை என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில்,பள்ளி, கல்லுாரி நேரங்களில் செல்லும் அரசு பஸ்களில் எப்போதும் மாணவர்கள் தொங்கியபடியே செல்லும் அவலநிலை இருந்து வருகிறது. இதனால் நாங்கள் நடந்து செல்வதும், சைக்கிள் மற்றும் டூவீலர்களில் செல்வோரிடம் ‘லிப்ட்’ கேட்டு செல்கிறோம். சில நேரங்களில் டிராக்டர், லோடு ஆட்டோவை நிறுத்தி லிப்ட் கேட்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு இல்லாத பயணமாக உள்ளது.இத்தகைய வாகனங்களை நம்பி ஏறுவதற்கும் அச்சமாக உள்ளது. மாணவ, மாணவிகளை யாரேனும் கடத்தி சென்றுவிடுவார்களோ என்ற பயமும் எங்களிடையே இருந்து வருகிறது. எனவே பள்ளி, கல்லுாரி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். லோடு ஆட்டோவில் பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசர அவசியம் கருதி செல்ல வேண்டிய நிலை உள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடுதுறை பஸ் ஸ்டாண்டில் பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் திருவிடைமருதுார் தாலுகாவில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட போக்குவரத்து கழக அலுவலர்கள் மாணவர்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்றனர். ஆனால் அதுபோல கூடுதல் பஸ்கள் இயக்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்….

The post திருவிடைமருதூர் பள்ளி, கல்லுாரி நேரங்களில் அரசு பஸ்களில் தொங்கியபடியே செல்லும் மாணவர்கள்-டிராக்டர், லோடு ஆட்டோவை நிறுத்தி லிப்ட் கேட்க வேண்டிய அவல நிலை appeared first on Dinakaran.

Tags : Thiruvidaimarudur ,Tiruvidaimarudur ,
× RELATED கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை