மெய்யான கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்தல்

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

முதலாவது கிறிஸ்து என்கின்ற வார்த்தையை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கிறிஸ்து எனப்படுகிற கிரேக்க சொல் யூதமதத்தில் அல்லது எபிரேய மொழியில் சொல்லப்படுகிற ‘மேசியா’ என்ற  வார்த்தையாகும். முதலாவது கிறிஸ்து என்கிற வார்த்தை ஒரு தலைப்பை அல்லது ஒரு சித்தாந்தத்தைக் குறிக்கும். கிறிஸ்து அல்லது மேசியா என்றால் ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்’ என்று பொருள். அது ஒரு அரசனையோ அல்லது தலைமை மத குருவையோ குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்’ என்று சொல்லும் போது எதற்காக அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பது தான் முக்கியம். அன்றாட மனித வாழ்க்கையில் துன்பங்களில் இருந்து அவர்களை காப்பாற்றுதலை அது குறித்தது. ஆரம்ப காலத்தில் யூதர்கள் பாபிலோனிய மாமன்னன் நெபுகாத்நெசார் என்பவரால் கொல்லப்பட்டு அல்லது சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு கொண்டுபோய் அங்கே அடிமை வாழ்க்கை வாழும் போது அந்த சிறையிருப்பின் துன்பங்களை அனுபவிக்கும் போதுதான் தன்னை மீட்டெடுக்க வேண்டும் அல்லது இந்த சிறையில் இருந்து மீள வேண்டும் அல்லது இந்த துன்ப வாழ்க்கையில் இருந்து தான் காப்பாற்றப்பட வேண்டும் என்ற சிந்தனையில் தான் ‘கிறிஸ்து’ அல்லது ‘மேசியா’ என்கிற சிந்தனை உருவானது.

மொத்தத்தில் கிறிஸ்து என்பது ஒரு சித்தாந்தம். Christ is an Ideology அல்லது ஒருங்கிணைத்த செயல்படுத்தக்கூடிய ஒரு நபருக்கு தரப்படும் ஒரு தலைப்பு. ஏசாய தீர்க்கன் (61:1-3) ‘மேசியா’ அல்லது ‘கிறிஸ்து’ பற்றி சொல்லும்போது ஒரு செயல்பாட்டை அல்லது ஒரு சித்தாந்தத்தை அறிவிக்கிறார்.  ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது. ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.  

ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரை குணப்படுத்தவும் சிதறப்பட்டோருக்கு விடுதலையை பறைசாற்றவும் கட்டுண்டோருக்கு விடிவை தெரிவிக்கவும். துயருற்று வாழ்வோருக்கு ஆறுதல் அளிக்கவும், சாம்பலுக்கு பதிலாக அழகு மாலை அணிவிக்கவும் புலம்பலுக்கு பதிலாக மகிழ்ச்சித்தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்கு பதிலாக ‘புகழ்’ என்னும் ஆடையை கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். இந்த கருத்தையே அருள் நாதர் இயேசு மொழிகிறார் (லூக்கா 4:18-19) தான் மேற்சொன்ன செயல்களை செய்ய கடவுளால் அனுப்பப்பட்டிருக்கிறேன் என்று அருள்நாதர் இயேசு மொழிகிறார்.

ஆக ‘மெய்யான கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்தல்’ என்பது கிறிஸ்து என்னும் சித்தாந்தத்தில் நம்பிக்கை வைப்பது ‘Believing in Christ’ என்பது ‘Believing in the Ideology of Christ. It is not believing simply or only the Person of Christ’ கிறிஸ்துவின் சித்தாந்தம் தான் மேற்குறிப்பிட்ட படி ஏசாயா தீர்க்கன் பகுதியிலும் லூக்கா நற்செய்தியிலும் சொல்லப்படுகிறது.  இந்த ஆய்வாளர்களின் பிற்பகுதியிலும் சொல்லப்படுகிறது. ஜூன் நற்செய்தியாளர் இயேசு பிறப்பதற்கு முன், அவர் வார்த்தையை அல்லது வாக்காக இருந்தார் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

யோவான் நற்செய்தியாளர் இயேசு பிறப்பதற்கு முன் அவர் ‘வார்த்தையாக’ அல்லது ‘வாக்காக’ இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். யோவான் 1:1-12. ‘வார்த்தை மாமிசமானார் அல்லது வாக்காக இருந்தவர் திருவுடல் பெற்றார்’ என்ற கருத்தை சொல்கிறார். ‘The wound became Flesh’ ஒரு சித்தாந்தம் இயேசு என்னும் உருவிலே திருவுடல் பெற்றது. The ideology became flesh என்று சொல்கிறார்.இயேசு என்னும் நபரிலே கிறிஸ்து எனப்படுகிற விடுதலையாளர் விடுவிக்கும் செயல் புரிந்தார் அல்லது இயேசு என்னும் நபரிலே கிறிஸ்து என்னும் சித்தாந்தம் செயல்படுத்தப்பட்டது.

இயேசு என்னும் நபர் உடலில் இல்லாத இச்சமயத்தில் சித்தாந்தமாக அவர் வாழ்கிறார். சித்தாந்தமாக அவர் யாருடைய உருவிலும் உடலிலும் செயல்படுகிறார். ‘`Now the flesh became wound or the flesh became ideology” எனவே மெய்யான கிறிஸ்துமீது நம்பிக்கை வைத்தல் என்பது மெய்யான ‘விடுதலை’ என்னும் சித்தாந்தத்தில் நம்பிக்கை வைப்பதாகும். அதுதான் சத்தியம்.எனவே கிறிஸ்து என்னும் நபரின் மீது நம்பிக்கை வைப்பது மட்டும் போதாது. கிறிஸ்து என்னும் சித்தாந்தத்தில் நம்பிக்கை வைப்பதே முக்கியமானது. என்னில் அன்புகூருகிறவன் என் கட்டளைகளை கைகொள்ளக்கடவன். ‘என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். விடுதலையை பறைசாற்றக் கூடிய என் நியமங்களைக் கடைப்பிடிக்கவும், எந்நீதிநெறிகளை கவனமாய் செயல்படுத்தவும் செய்வேன்’.

Related Stories: