×

தா.பழூர் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரம்-விலை குறைக்காமல் இருக்க விவசாயிகள் வேண்டுகோள்

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா பழூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஸ்ரீ புரந்தான், முத்துவாஞ்சேரி, காசாங் கோட்டை, சுத்தமல்லி, நடுவலூர், கோரைக்குழி, ஆலம்பள்ளம், சோழமாதேவி, அணைக்குடம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது மக்காச்சோளம் அறுவடை தருணத்தில் உள்ளதால் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்பொழுது கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் முதல் உழைக்கும் வர்க்கத்தினர் வரை அனைவரும் தொழில் நகரங்களை சார்ந்து வேலைகளுக்காக வெளியில் சென்று வருவதால் விவசாய வேலைகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆள் செலவும் அதிகரித்து உள்ள காரணத்தினால் விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்தி தற்போது விவசாயம் செய்து வருகின்றனர். இயந்திரம் மூலம் மக்காச்சோளம் விதைப்பு செய்யப்பட்ட நிலையில் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. இதனை அடுத்து விவசாயிகள் மக்காச்சோளத்தை அறுவடை செய்து உலர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். இந்த மக்காச்சோளம் அறுவடையை துவங்கியுள்ள சோழமாதேவியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற விவசாயி கூறும் பொழுது. விதை 750 கிராம் பாக்கெட் என்ற விதத்தில் மூன்று ரகங்களாக உள்ளது. இவை 1300, 1400, 1500 ரூபாய் என 750 கிராம் பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சராசரியாக ஒரு ஏக்கர் விதைப்பு செய்வதற்கு ஐந்து கிலோ மக்காச்சோளம் விதை தேவைப்படுவதாகவும் விதைப்பு செய்வது மூலம் ஒரு ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் வரை மகசூல் இழப்பு இல்லாத நிலையில் மகசூல் எடுக்கலாம் என விவசாயி கூறுகின்றார். இந்த மக்காச்சோளம் பயிர் செய்து மூன்று மாதங்கள் அதாவது 90 நாள் பயிராக இது அறுவடைக்கு தயாராகிறது. தண்ணீர் அதிகமாக தேவை உள்ள நிலையில் இது கூடுதல் மகசூலை தருகிறது எனவும் ஒரு மாதத்திற்கு 12 முறை தண்ணீர் விட வேண்டிய நிலை உள்ளது. இந்த சாகுபடியில் அவ்வப்போது மழை பொழிவு இருந்த காரணத்தினால் தண்ணீர் பாய்ச்சுவது சற்று குறைவாகவே இருந்தது.மக்காச்சோளம் விதைப்பிற்கு ஏர் உழுதல், விதைப்பு, உரம், மருந்து செலவு என ஏக்கருக்கு சுமார் 15,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. இருப்பினும் படைப்புழு தாக்குதல் இல்லாததால் பூச்சி தாக்கம் மட்டும் இருந்த நிலையில் வேளாண் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்கள் ஆலோசனைப்படி மருந்து தெளித்து பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டது. ஆகையால் பெரிய அளவு மகசூல் இழப்பு ஏற்படவில்லை எனவும் போதிய மகசூல் உள்ளதாக விவசாயி கூறுகின்றார். அவ்வப்போது கமிட்டியில் மக்காச்சோளம் விலை குறைந்து வருவது கவலை அளிப்பதாகவும் கமிட்டியில் விலை குறையாத பட்சத்தில் விவசாயிகளுக்கு போதிய லாபம் உள்ளதாகவும் தெரிவித்தார்….

The post தா.பழூர் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரம்-விலை குறைக்காமல் இருக்க விவசாயிகள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : T.D. ,Palur ,T.D. Padur ,Ariyalur district ,Tha Padur ,Sri Purandan ,Muthuwancheri ,Gasang Fort ,Chadhamalli ,T.A. ,Palaur ,Dinakaran ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது