×

மண வாழ்வு அருளும் மஞ்சள் தேங்காய்

மஞ்சள் பூசிய தேங்காய் ஒன்றில் விரளி மஞ்சள் கட்டிய தாலிக்கயிறை குடுமியில் சுற்றி சந்தனம், குங்குமம் மூன்று இடங்களில் வைத்து சிவப்பு அல்லது மஞ்சள் நிற மலர்ச்சரம் சாற்றி ஒரு தட்டில் வையுங்கள். மஞ்சள் பிள்ளையார், இஷ்ட தெய்வம் குல தெய்வங்களை நினைத்து 48 நாட்கள் பூஜை செய்து வந்தால் வியக்கும்படி திருமணம் உறுதியாகும்.  நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் ஆலயத்திற்கு மணி, தட்டு, மஞ்சள் ஆரத்தி, கலச சொம்பு என பூஜைப் பொருட்களை நம் விருப்பப்படி  வாங்கித் தரலாம். முகூர்த்த தேங்காயை உடையாமல் பத்திரமாக எடுத்துச் சென்று அருகிலுள்ள கோயில் குளத்து நீரில் விட வேண்டும். வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் சென்னை - குன்றத்தூர் கல்யாண காத்யாயனி அம்மன் கோயிலில் மஞ்சள் தேங்காயை பூஜை செய்யும் விவரங்களோடு தருகிறார்கள். மகன், மகள் திருமணம் விரைவாக நடந்து விட இந்த முகூர்த்தத் தேங்காயைப் பெற்று வரலாம்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?