×

‘எல்லாமே கடன்தான்’: விஜய் ஆண்டனி ஓபன் டாக்

சென்னை: விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் ‘மார்கன்’. ஜூன் 27ம் தேதி ரிலீசாகிறது. எடிட்டராக இருந்த லியோ ஜான் பால் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, பிரிகிடா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

மர்மம் கலந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில், விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் வில்லனாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி பேசியது: நான் தொடர்ந்து படங்களைத் தயாரிப்பதைப் பார்த்து, பலர் என்னிடம் அதிகப் பணம் இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். எல்லாமே கடன்தான், அதற்கு மாதம் மாதம் வட்டி கட்டி வருகிறேன். இந்தப் படத்தின் இயக்குநர் லியோ ஜான் பாலை எனக்கு ‘பிச்சைக்காரன்’ படத்தில் இருந்தே தெரியும்.

அவர் ஒரு திறமையான எடிட்டடர். நான் செய்த தவறை அவர் செய்யக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். நான் படத்தில் நடிக்க வந்த பிறகு, இசையமைப்பதை நிறுத்திவிட்டேன். நீங்கள் இன்னும் எத்தனை படத்தை இயக்கினாலும், எடிட்டிங் செய்வதை நிறுத்திவிடக்கூடாது. நான் தற்போது மீண்டும் படத்திற்கு இசையமைக்க இருக்கிறேன், மற்ற நடிகர்களின் படத்தையும் தயாரிக்க இருக்கிறேன் என்றார். இயக்குனர்கள் சசி, நலன் குமாரசாமி, தயாரிப்பாளர்கள் சி.வி.குமார், டி.சிவா, தனஞ்செயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Vijay Antony ,Chennai ,Meera Vijay Antony ,Vijay Antony Film Corporation ,Leo John Paul ,Samuthirakani ,Mahanadi Shankar ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்