×

போளூரில் அதிமுக பொதுக்கூட்டம் எடப்பாடி பழனிசாமியும் நானும் ஒரே சமூகம் தான்: கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு

போளூர்: எடப்பாடி பழனிசாமியும் நானும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் என்று போளூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: அண்ணா, எம்ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வளர்த்த கட்சி அதிமுக. இந்த கட்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. அவர்கள் வழியில் ஆட்சி நடத்தியவர் எடப்பாடிபழனிசாமி தான். இன்றைய நிலை வேறு, எடப்பாடி பழனிசாமியும் கவுண்டர், நானும் கவுண்டர். இது தான் நிலை. சில பேர் சொல்வார்கள் என்னடா? செங்கோட்டையனை காணோம். 9 முறை ஜெயித்தவர், என்று. எத்தனை கவுண்டர் தான் வருவது. ஒரு கவுண்டர் வரலாம். இது நமது இயக்கத்தின் நிலை. நம் இயக்கத்தில் இருக்கிற நிலைப்பாடு. அடுத்த முதலமைச்சர் எடப்பாடி தான். அதனை யாராலும் மாற்ற முடியாது. ஒருத்தரைத்தான் நாம் ஏற்றுக்கொள்ள முடியும். ஒருவர்தான் முதலமைச்சராக வர முடியும். ஒரு உறையில் 2கத்தி இருந்துவிட முடியாது. ஒரு கத்தியை எடுத்தால் தான் இன்னொரு கத்தியை சொருக முடியும். எடப்பாடி தனது தலைமையில் இந்த இயக்கத்தை தடையின்றி வழிநடத்தி செல்கிறார். உள்துறை அமைச்சரை சந்திக்கிறார். எனவே கவலைப்பட தேவையில்லை என்றார். …

The post போளூரில் அதிமுக பொதுக்கூட்டம் எடப்பாடி பழனிசாமியும் நானும் ஒரே சமூகம் தான்: கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisamy ,Polur ,K.K. PA ,Srakkotan ,Polore ,Edabadi Palanisami ,International General Conference ,Edabadi Palanisamy ,K. PA ,Sakkotan ,
× RELATED அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புச்சட்டை அணிந்துவருகை..!!