×

தரகம்பட்டி அருகே அரசகவுண்டனூரில் பொது இடத்தில் ஆக்கிரமிப்பு ஆட்டுக்கொட்டகை அகற்றம்-அதிகாரிகள் அதிரடி

தோகைமலை : கடவூர் தரகம்பட்டி அருகே செம்பியத்தம் ஊராட்சி அரசகவுண்டனூரில் பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து உள்ள ஆட்டுக்கொட்டகையை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நேற்று அதிகாரிகள் அகற்றினர் கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டி அருகே செம்பியநத்தம் ஊராட்சி அரசகவுண்டனூரில் வசிக்கும் தனி நபர் ஒருவர், அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே பொது இடங்களை ஆக்கிமித்து அரசு வழங்கிய ஆட்டுக்கொட்டகை அமைத்து உள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுஇடத்தில் ஆக்கிரமித்து கட்டி உள்ள ஆட்டுக்கொட்டகையை அகற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர் அதன் பிறகு நடவடிக்கை ஏற்படவில்லை என்பதால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கடந்த 2.8.2022 அன்று செம்பியநத்தம் ஊராட்சி முன்பாக காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் தாசில்தார் ராஜாமணி தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்து உள்ள நபருக்கும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து கடந்த 30.7.2022 அன்று கடவூர் தாசில்தார் ராஜாமணி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் செம்பியநத்தம் ஊராட்சி அரசகவுண்டனூரில் பொது இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஆட்டுக்கொட்டகையை அகற்றி ஊர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என்பதால் கடவூர் ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் தாசில்தார் ராஜாமணி, ஒன்றிய ஆணையர் கிறிஷ்டி, தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நேற்று (20ம்தேதி) ஆக்கிரமிப்பு செய்து உள்ள ஆட்டுக்கொட்டகையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர் இதனை அடுத்து கடவூர் தாசில்தார் ராஜாமணி ஆலோசனையின் படி ஒன்றிய ஆணையர் கிறிஷ்டி, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், செம்பியநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, தலைமை இடத்து துணை வட்டாட்சியர் சுரேஷ், பாலவிடுதி ஆர்ஐ சிவக்குமார் ஆகியோர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பொது இடத்தில் ஆட்டுக்கொட்டகை அமைத்து இருப்பது தெரியவந்தது. இதனால் வெல்டிங் பிளேடு மூலம் ஆட்டுக்கொட்டகையை அறுத்தனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறபடுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், விஏஓ ரகு, ஊராட்சி மன்ற செயலாளர் முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்….

The post தரகம்பட்டி அருகே அரசகவுண்டனூரில் பொது இடத்தில் ஆக்கிரமிப்பு ஆட்டுக்கொட்டகை அகற்றம்-அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : RAJAGUGUNDANOR ,Dharagambati ,Dogimalai ,Chembiyattam Padragampati ,Kadavur Dharagampatti ,Gadavandanur ,Rashkandanur ,Bhagambati ,
× RELATED கடவூர் மற்றும் தோகைமலையில் சர்க்கரைவல்லிக்கிழங்கு சாகுபடி துவக்கம்