×

உசிலம்பட்டி அருகே தனியார் மில்லில் 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்-‘புஷ்பா’ பட பாணியில் டேங்கரில் கடத்த முயற்சி

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே தனியார் மில்லில் புஷ்பா பட பாணியில் டேங்கரில் கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.உசிலம்பட்டி- வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள தனியார் அரிசி மாவு மில்லில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி நல்லு, தாலுகா விநியோக அதிகாரி பாலகுமாரன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மில்லுக்குள் மாவாக அரைக்க 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது.தொடர்ந்து அருகில், டிராக்டர் இல்லாமல் தனியாக நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் டேங்கரில் சோதனை நடத்தினர். இதில் புஷ்பா திரைப்பட பாணியில் தண்ணீருக்கு பதிலாக டேங்கர் முழுவதும் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த 5000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தலைமறைவான மில் உரிமையாளர் கலா (60), அவரது மகன் பிரசாத் (25) ஆகியோரை தேடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே மில்லில் ரேசன் அரிசியை கைப்பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post உசிலம்பட்டி அருகே தனியார் மில்லில் 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்-‘புஷ்பா’ பட பாணியில் டேங்கரில் கடத்த முயற்சி appeared first on Dinakaran.

Tags : Uzilimbabatti ,Pushpa ,Bushba ,Dinakaran ,
× RELATED குன்னூர் அருகே தேயிலை எஸ்டேட்டின் இரும்பு கேட் திருடிய இருவர் கைது