×

மதுராந்தகம் – சென்னை புறவழிச்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்துள்ள முட்புதர்கள்: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சென்னை மாநகரில் இருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மதுராந்தகம் நகராட்சி. பாண்டிச்சேரி, மரக்காணம், சூனாம்பேடு, மதுராந்தகம் வழியாக சென்னை செல்லும் பேருந்து, கார், பைக் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும், செய்யூர், சித்தாமூர், மதுராந்தகம்  சென்னைக்கும், கூவத்தூர் பவுஞ்சூர் வழியாக மதுராந்தகம் வந்து சென்னை செல்லும் வாகனங்களும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் ஒருசில அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் மதுராந்தகம் நகருக்கும் மதுராந்தகம் புறவழிச் சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றன. இவ்வாறு அதிக முக்கியத்துவம் பெற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லக்கூடிய சாலையாக மதுராந்தகம் – சென்னை புறவழிச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது இந்த சாலையின் இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ள முட்புதர்களால் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைவதும் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் பயணிகள் லேசாக காயமடைவதும் சாலையில் கொட்டி கிடக்கும் முட்களால் இருசக்கர வாகனங்கள் பஞ்சராவது போன்ற பல்வேறு நிகழ்வுகள் தினமும் நடக்கிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும் பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். …

The post மதுராந்தகம் – சென்னை புறவழிச்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்துள்ள முட்புதர்கள்: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurandakam ,Chennai ,Madurandhakam ,Chennai- Trichy National Highway ,Madurandagam ,Dinakaran ,
× RELATED இனப்பெருக்க காலம் முடிந்தது சொந்த...