×

வரதட்சணை வழக்கில் 2 ஆண்டாக தேடப்பட்ட ஆந்திர வாலிபர் கைது

மீனம்பாக்கம்: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் ராஜாமோகன் (35). இவர், தனது மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நெல்லூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி போலீசார் வழக்குபதிந்து ராஜாமோகனை தேடினர். இதுபற்றி அறிந்த அவர் தலைமறைவானார். இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ராஜாமோகனும் இதில் வந்திருந்தார். அவரை தனியறையில் அடைத்து வைத்து, நெல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தனிப்படை போலீசார் விரைந்து வந்து ராஜாமோகனை கைது செய்து அழைத்துச் சென்றனர்….

The post வரதட்சணை வழக்கில் 2 ஆண்டாக தேடப்பட்ட ஆந்திர வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : AP ,Waliber ,Meenambakkam ,Rajamogan ,Nellore, AP ,Volliber ,Dinakaran ,
× RELATED ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...