×

ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க நடுக்கமாக இருக்கிறது : படபடக்கும் ரகுல் ப்ரீத்

மறைந்த பிரபல நடிகர், நடிகைகளின் வாழ்க்கை சரித்திர படங்கள் உருவாகி வருகின்றன. சாவித்ரி வாழ்க்கை சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். தற்போது எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாகி வருகின்றன. என்.டி.ராமராவ் படத்தை பொறுத்தவரை தெலுங்கில் உருவாகி வருகிறது. என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கிறார். மனைவியாக வித்யாபாலன் நடிக்கிறார்.

என்.டி.ராமராவ் படங்களில் நடித்தபோது அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி போன்ற முன்னணி நடிகைகள் நடித்தனர். அதுபோன்ற காட்சிகளும் வாழ்க்கை சரித்திர படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுபற்றி ரகுல் கூறியதாவது: ஸ்ரீதேவியை நான் ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை. அவரது வேடத்தில் நடிப்பது நடுக்கமாகவே உள்ளது.

அவர் நடித்த பழைய படங்கள் பலவற்றை நான் பார்த்து வருகிறேன். அதிலிருந்து அவரது மேனரிஸம், நடிப்பு பாணி போன்றவற்றை கவனித்து வருகிறேன். ஸ்ரீதேவிக்காக இப்படத்தில் எழுதப்பட்டிருக்கும் ஸ்கிரிப்ட் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. ஸ்ரீதேவி வேடத்தில் என்னிடம் என்னவிதமான நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களோ அதை சிறந்த முறையில் தர முயற்சிப்பேன். இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் கூறினார்.

Tags : Sridevi ,
× RELATED திமுக சார்பில் வரும் 31-ம் தேதி...