×

மகன் காதல் திருமணம் செய்ததால் பெண்ணின் பெற்றோர் மிரட்டல்-மாவட்ட ஆட்சியரிடம் மனு

கடலூர் :  வடலூர் அருகே உள்ள பாச்சாரபாளையம் கிராமத்தை சேர்ந்த தனஞ்செயன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் தாமரைக்கண்ணன் என்பவரும் எங்கள் கிராமத்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகள் மகாலட்சுமியும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரின் காதல் விவகாரம் மகாலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் மகாலட்சுமியை கண்டித்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் பாச்சாரபாளையம் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தோம். இந்நிலையில் மகாலட்சுமியின் தந்தை அவரது அடியாட்கள் மூலம் மிரட்டி, எங்களை தெருவில் நடக்ககூடாது, தண்ணீர் பிடிக்க கூடாது, கடையில் பொருட்கள் வாங்ககூடாது என மிரட்டி கடுமையாக தாக்கினர். இதுகுறித்து வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் கடந்த 8 மாதங்களாக எங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் வெளியூரில் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது….

The post மகன் காதல் திருமணம் செய்ததால் பெண்ணின் பெற்றோர் மிரட்டல்-மாவட்ட ஆட்சியரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Dhananjeyan ,Bacharapalayam ,Vadalur ,Dinakaran ,
× RELATED குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது