×

தேயிலை தோட்டத்தில் 13 யானை கூட்டம் முகாம்-தொழிலாளர்கள் பீதி

வால்பாறை :  வால்பாறையை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பீதியில் தவித்து வருகின்றனர். கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்துள்ளது சிறுகுன்றா எஸ்டேட். அடர் வனத்தில் இருந்து வெளியேறிய 13 யானைகள் கொண்ட கூட்டம் தேயிலைத் தோட்டத்தில் தற்போது முகாமிட்டு உள்ளது. இந்த யானைகளை கண்டதும் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அங்கிருந்து உயிர்பயத்தில்  ஓட்டம் பிடித்தனர். அப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டம் வழியாக சிற்றோடை பகுதிக்கு செல்ல முயன்றவாறு யானை கூட்டம் சுற்றி சுற்றி வந்து நடமாடியது. இதனால் தேயிலை தோட்ட பணியாளர்கள், தொழிலாளர்கள் மாற்று பாதை வழியாக தேயிலை தோட்ட பணிகளுக்கு சென்றனர். இதையடுத்து, சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தால் தேயிலை தோட்ட பணிகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.எனவும், இயல்பு வாழ்க்கையை தொடரும் வகையில் யானை கூட்டத்தை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை வன அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தேயிலை தோட்டத்தில் 13 யானை கூட்டம் முகாம்-தொழிலாளர்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Valparai ,Sirukunra Estate ,Dinakaran ,
× RELATED வால்பாறையில் சாரல் மழை-மூடுபனி