×

உ.பி.யில் கழிவறையில் வைத்து கபடி வீரர்களுக்கு உணவு விநியோகம்: இடம் பற்றாக்குறையே காரணம் என அதிகாரிகள் விளக்கம்..சமூக வலைத்தளங்களில் கண்டனம்..!!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடம் பற்றாக்குறையே காரணம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்திருப்பதற்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சகரான்ப்பூரில் செப்டம்பர் 16ம் தேதி 17 வயதுக்குட்பட்ட இளம் பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. அப்போது வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து மதிய உணவு வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமைக்கப்பட்ட உணவுகளை கழிவறைக்குள் வைத்து மாணவிகளுக்கு விநியோகம் செய்த வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. விளையாட்டு மைதானம் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத நிலையில் இருப்பதாகவும், நீச்சல் குளம் அருகே உணவு சமைக்கப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ள மாவட்ட நிர்வாகம், அந்த சமயத்தில் மழை பெய்ததால் தவிர்க்க முடியாத காரணத்தால் கழிவறையை பயன்படுத்த நேரிட்டது என்றும் ஆதிர்ச்சியூட்டும் பதிலை அளித்துள்ளனர். இந்த காரணத்தை ஏற்க மறுத்துள்ள நெட்டிசன்கள், இது தான் உ.பி. மாடாலா என்று அம்மாநில அரசை வறுத்தெடுத்து வருகின்றனர். இதையடுத்து மாவட்ட விளையாட்டு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். …

The post உ.பி.யில் கழிவறையில் வைத்து கபடி வீரர்களுக்கு உணவு விநியோகம்: இடம் பற்றாக்குறையே காரணம் என அதிகாரிகள் விளக்கம்..சமூக வலைத்தளங்களில் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Kabaddi ,Uttar Pradesh ,U. GP ,
× RELATED உத்திரபிரதேசத்தில் பேருந்து – லாரி மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு