×

‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்கா ‘ஜன நாயகன்’?

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’ என்ற படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளதால் கட்சி பணிகளிலும், சினிமா படப்பிடிப்பிலும் மாறி, மாறி கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் ஜூன் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிவடையும் என்று சொல்லப்படுகிறது.

‘ஜன நாயகன்’ படம் தொடங்கியதில் இருந்தே இது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘பகவந்த் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்போது ‘பகவந்த் கேசரி’ ரீமேக் உரிமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை மட்டும் ‘ஜன நாயகன்’ படத்தில் பயன்படுத்த இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஒரு காட்சிக்காக மொத்த படத்தின் உரிமையையும் 4.5 கோடி ரூபாய் கொடுத்து ‘ஜன நாயகன்’ படக்குழு வாங்கியுள்ளது.

‘பகவந்த் கேசரி’ படத்தை பார்த்துவிட்டு, அதில் வரும் ‘குட் டச்… பேட் டச்’ காட்சியை ‘ஜன நாயகன்’ படத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்று விஜய் விரும்பினார். அதற்கு சம்மதித்த ஹெச்.வினோத், இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கும்படி படக்குழுவினரிடம் சொன்னார். இந்த ஒரு காட்சியை தவிர ‘பகவந்த் கேசரி’ படத்துக்கும், ‘ஜன நாயகன்’ படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதில் ‘தளபதி வெற்றிகொண்டான்’ என்ற பெயரில் விஜய் நடிப்பதாகவும், அவர் ஏற்றிருப்பது போலீஸ் கேரக்டர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Vijay ,H. Vinoth ,Pooja Hegde ,Prakash Raj ,Bobby Deol ,Gautham Vasudev Menon ,Narain ,Priyamani ,Mamita Baiju ,Anirudh ,
× RELATED கிணறு விமர்சனம்…