×

பிரான்ஸ் விமானப்படை விமானம் சென்னையில் தரையிறங்கியது

சென்னை: பிரான்ஸ் நாட்டு விமானப் படையின் பிரமாண்டமான, ‘ஏ 400 எம் அட்லஸ்’ விமானம், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கி, எரிபொருளை நிரப்பிக் கொண்டு அபுதாபிக்கு புறப்பட்டு சென்றது. ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ 400 எம் அட்லஸ் என்ற வகையைச் சேர்ந்த இந்த விமானம், பிரான்ஸ் ராணுவத்துக்காக வடிவமைக்கப்பட்டது. மணிக்கு 880 கி.மீ., வேகம் செல்லக் கூடிய இந்த போர் விமானம், வானிலேயே பறந்தபடி, மற்றொரு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வசதி கொண்டது. முறையான ஓடுபாதை இல்லாத இடத்திலும் கூட, இந்த விமானத்தை எளிதாக தரையிறக்க முடியும். இதில் போருக்கு தேவையான கனரக ஹெலிகாப்டர், போர் வாகனங்களை எடுத்துச் செல்லலாம். இதேபோல, பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளிலும் பயன்படுத்தப்படுத்தலாம். பிரான்ஸ்  விமானப்படை போர் விமானம், கடந்த 16ம் தேதி பிற்பகலில், சிங்கப்பூரில் இருந்து, அபுதாபி நோக்கி சென்றது. விமானத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக, பிற்பகல் 2:20 மணிக்கு, சென்னை விமானநிலை யத்தில் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பிய பின், மாலை 5 மணியளவில், அபுதாபிக்கு புறப்பட்டுச் சென்றதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் டிவிட்டரில் நேற்று மாலை பதிவிட்டுள்ளனர்….

The post பிரான்ஸ் விமானப்படை விமானம் சென்னையில் தரையிறங்கியது appeared first on Dinakaran.

Tags : French Air Force ,Chennai ,Chennai airport ,
× RELATED போலி ஐடி மூலம் மெயில் அனுப்பிய மர்ம...