×

டிரைவர், கண்டக்டர்களுக்கு மிகை நேர ஊதியம்: தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

சென்னை: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கவேண்டும் என அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் எம்டிசி மேலாண் இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகர் போக்கு வரத்துக் கழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கின் போதும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் பேருந்து இயக்கம் குறைக்கப்பட்டது. தற்போது பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. மேலும் சென்னை பெருநகரத்தில் அனைத்து நாட்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் திருமண முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் ஓட்டுநர், நடத்துநர்கள் பணி செய்ய மிக சிரமப்படுகின்றனர்.கடந்த 6 மாதங்களாக நிர்வாகத்தில் டீசல் சிக்கனம் காரணத்தினால் பேருந்து வழித்தடங்கள் நடைகுறைப்பு அளிக்கப்பட்டது. தற்போது பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நடைகுறைப்பு கைவிடப்பட்டு அனைத்து பயணநடைகளையும் முழுமையாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது. அதனால் அனைத்து பேருந்துகளும் குறைந்தபட்சம் 1 முதல் 2 மணி நேரம் வரை காலதாமதம் ஏற்படுகிறது. எனவே காலதாமதமாக பணி முடிக்கக்கூடிய அனைத்து வழித்தடங்களில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தொழிற்தகராறு சட்டத்தின்படி 14வது ஊதிய ஒப்பந்தத்தில் உயர்த்தப்பட்ட அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி கணக்கிட்டு மிகை நேர ஊதியம் வழங்கவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post டிரைவர், கண்டக்டர்களுக்கு மிகை நேர ஊதியம்: தொழிற்சங்கத்தினர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Government Transport Employees Union ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…