×

நில பிரச்னை காரணமாக பெண்ணை கீழே தள்ளி சிறுநீர் கழித்தவர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி சாஸ்திரி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் இருதயமேரி (55). இவரது கணவர் கடந்த 2014ம் ஆண்டு இறந்து விட்டார். வீட்டின் அருகில் உள்ள இவருக்கு சொந்தமான இடத்திற்கு, பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சூசை ஆரோக்கியதாஸ் (46) என்பவர் உரிமை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பாக, நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருதயமேரி, இடத்திற்கு சொந்தமான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. அதை மீறி ஆக்கிரமிக்க நினைத்தால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்,’’ எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூசை ஆரோக்கிய தாஸ், இருதயமேரியை தாக்கி, கீழே தள்ளி அவர் முன்பு சிறுநீர் கழித்து உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இருதயமேரி இதுகுறித்து எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதில், சூசை ஆரோக்கியதாஸ் போதையில் பெண்ணை அவமானப்படுத்தும் நோக்கில் அவர் முன் சிறுநீர் கழித்தது தெரிய வந்தது. இதனையடுத்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சூசை ஆரோக்கியதாஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post நில பிரச்னை காரணமாக பெண்ணை கீழே தள்ளி சிறுநீர் கழித்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Vyasarbati Shastri Nagar ,7th Street, Kudhayameri ,55 ,Dinakaran ,
× RELATED தனது வீட்டு மாடியில் இருந்து பக்கத்து...