×

தாம்பரத்தில் ரூ.38 லட்சத்தில் கான்கிரீட் தளம், குடிநீர் தொட்டி: எம்எல்ஏ திறந்து வைத்தார்

தாம்பரம்: தாம்பரம், கடப்பேரி, ஜிஎஸ்டி சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து பணிமனையில் கான்கிரீட் தரை அமைத்து தர வேண்டும் என, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள்  முடிவடைந்ததை தொடர்ந்து, எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா நேற்று முன்தினம் கான்கிரீட் தரையை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.இதேபோல தாம்பரம் சானடோரியம் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் டி.காமராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

The post தாம்பரத்தில் ரூ.38 லட்சத்தில் கான்கிரீட் தளம், குடிநீர் தொட்டி: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Tambaram ,GST road ,Kadapperi ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பாதாள...