×

போதைக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை: கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது

கோவை: கோவை ரத்தினபுரி டாடாபாத் 9வது விதியில் போதை மாத்திரை விற்பதாக புகார் கிடைத்து ரத்தினபுரி போலீசார் அங்கு சோதனை நடத்த சென்றனர். போலீசாரை கண்டதும் வாலிபர்கள் தப்பி செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் 4 பேரிடம் போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் இருந்தன. இதையடுத்து, ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விவேக் பாரதி (18), 16 வயது சிறுவன், தேனி மாவட்டத்தை சேர்ந்த கோவையில் தங்கி கல்லூரியில் படித்து வரும் தனபாலன் (19), போதை மாத்திரைகளை பதுக்கி கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்யும் மருந்து கடை உரிமையாளர் கரிகாலன் (49) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து  1304 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கோவை நகரில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகளை பரவலாக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. கரிகாலன் சிங்காநல்லூரில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர், கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மாத்திரை, வலி நிவாரண மாத்திரை, நரம்பு  நோய் பாதிப்புக்கான மாத்திரைகளை போதைக்காக மாணவர்களுக்கு வழங்கியதும், 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்தது. பிடிபட்ட மாணவர்களிடமிருந்து 3 வகையான போதை மாத்திரை அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. போதை மாத்திரைகளை வாங்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில், வகுப்பறையில் பயன்படுத்தியுள்ளனர். போதை மாத்திரை தேவைப்படும் நபர்களை குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைத்து அங்கு மாத்திரை வழங்கி வருகின்றனர்….

The post போதைக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை: கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ratnapuri ,Tatapath ,Dinakaran ,
× RELATED மத ரீதியான பதிவு; போலீசார் வழக்கு